மத்திய அரசு நடத்தாவிட்டால் பீகார் அரசே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் நிதிஷ்குமார்

மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்களை கேட்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது.
பாட்னா,
பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மத்திய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதி விவரங்களை கேட்பது இல்லை என்று முடிவு செய்துள்ளது. அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, பீகாரை சேர்ந்த அனைத்து கட்சி குழு, பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்த உள்ளது. அதற்காக பிரதமரிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருக்கிறேன். இன்னும் பதில் வரவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் மத்திய அரசு மெத்தனமாக இருந்தால், மாநில அரசின் நிதி ஆதாரத்தில் அதை செய்வது பற்றி நாங்கள் பரிசீலிப்போம். ஆனால், மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என்பதால், மத்திய அரசே தேசிய அளவில் சாதி விவரங்களை சேகரித்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story