உத்தரபிரதேசம் : கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


உத்தரபிரதேசம் : கன்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x
தினத்தந்தி 12 Aug 2021 5:24 AM GMT (Updated: 2021-08-12T10:54:48+05:30)

உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

லக்னோ: 

உத்திரபிரதேசத்தின் லக்னோவிலிருந்து  ஒரு குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் ஜார்க்கண்ட் சென்று கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் சென்ற கார் தேசிய நெடுஞ்சாலையில் புரைனா என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது இதில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

படுகாயம் அடைந்த டிரைவர் மற்றும்  சிறுமி  அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அதில் டிரைவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உத்தரபிரதேச முதல் மந்திரி  யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு  இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story