15 கோடி குழந்தைகள் - இளைஞர்கள் முறையான கல்வி முறையிலிருந்து வெளியேறி உள்ளனர்- மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

75 வருட சுதந்திர தினத்திற்குப் பிறகு, எழுத்தறிவு பெற்ற மக்களின் புள்ளிவிவரங்கள் 80 சதவீதத்தை எட்டியுள்ளன என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.
புதுடெல்லி
இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) அதன் வருடாந்திர கூட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில் முனைவோர் என்ற தலைப்பில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-
அரசு, தனியார் மற்றும் தொண்டு பள்ளிகள், அங்கன்வாடிகள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் படிக்கும் 3-22 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை சுமார் 35 கோடி ஆகும். அதே நேரத்தில் நாட்டின் இந்த வயதினர் மொத்த தொகை சுமார் 50 கோடியாகும்.
இதன் பொருள் குறைந்தபட்சம் 15 கோடி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முறையான கல்வி முறையிலிருந்து வெளியேறிவிட்டார்கள். நாங்கள் அவர்களை கல்வி முறைக்கு கொண்டு வர விரும்புகிறோம்.
நாடு சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் 19 சதவீதம் மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள்.
75 வருட சுதந்திர தினத்திற்குப் பிறகு, எழுத்தறிவு பெற்ற மக்களின் புள்ளிவிவரங்கள் 80 சதவீதத்தை எட்டியுள்ளன. அதாவது 20 சதவீதம் மக்கள் அல்லது சுமார் 25 கோடி பேர் கல்வியறிவுக்கான முதன்மை வரையறைக்குக் கீழே உள்ளனர்.
புதிய தேசியக் கல்விக் கொள்கையில் வெறும் ஆவணம் மட்டுமல்ல சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் போது குறிப்பிட்ட இலக்குகளை அடைய அடுத்த 25 வருடங்களுக்கு ஒரு வரைபடம்.
முதல் முறையாக அரசு கல்வி மற்றும் திறன் துறைகளை இணைத்துள்ளது.இந்த நடவடிக்கை நல்ல வாழ்வாதாரத்திற்கான புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story