சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக சரிவு

சில்லரை விலை பணவீக்கம் 5.59 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கடந்த ஜூலை மாதத்தில் சில்லரை விலை பணவீக்க விகிதம் (விலைவாசி) 5.59 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) தெரிவிக்கையில், “உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து சென்ற ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 5.59 சதவீதமாக சரிந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில் 6.26 சதவீதமாகவும், 2020 ஜூலையில் 6.73 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.
உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் 5.15 சதவீதத்திலிருந்து 3.96 சதவீதமாக குறைந்துள்ளது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது. 2021-22இல் சிபிஐ பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்திருந்தது. இது, இரண்டாவது காலாண்டில் 5.9 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 5.3 சதவீதமாகவும், நான்காவது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும்; 2022-23 முதல் காலாண்டில் இப்பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
Related Tags :
Next Story