ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - மத்திய அரசு


ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை -  மத்திய அரசு
x
தினத்தந்தி 13 Aug 2021 5:19 PM IST (Updated: 13 Aug 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கோப்பைகள், தட்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.  ஜூலை 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தும்  பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை பயன்பாட்டுக்கு ஜூலை 2022 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக்  பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் அளவுக்கு மேல் இருக்க வேண்டியது செப்டம்பர் 30-ம் தேதி முதல் கட்டாயம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   பிளாஸ்டிக் பைகளின் தடிமனுக்கான அளவு 120 மைக்ரானாக உயர்த்தப்படுகிறது.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை தமிழகத்தில் ஏற்கெனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story