ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் தடை

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிக்கையில், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகள் உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு 2022 ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.
ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பது ஒரு பிளாஸ்டிக் பொருளை அப்புறப்படுத்தப்படுவதற்கு அல்லது மறுசுழற்சி செய்வதற்கு முன்பு ஒரே நோக்கத்திற்காக ஒரு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறது.
தற்போது, நாட்டில் 50 மைக்ரானுக்கு குறைவான பாலிதீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் புதிய விதிகளின்படி, 75 மைக்ரானுக்குக் குறைவான தடிமன் கொண்ட பாலிதீன் பைகள் செப்டம்பர் 30 முதல் தடைசெய்யப்படும் மற்றும் 120 மைக்ரானுக்கு குறைவான பைகள் அடுத்த ஆண்டு டிசம்பர் 31 முதல் தடை செய்யப்படும்.
இதன் படி பிளாஸ்டிக் குச்சிகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், சாக்லெட் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள்,தட்டுகள், கோப்பைகள், பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவை இதில் அடங்கும்.
Related Tags :
Next Story