தடுப்பூசி போடுவதில் பெண்களுக்கு முன்னுரிமை; மகளிர் ஆணைய தலைவி, மாநில அரசுகளுக்கு கடிதம்

தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா சர்மா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். சுகாதார செயலாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்பட்டு உள்ளது.
அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
“தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு கவலை தெரிவித்த ரேகா சர்மா, தடுப்பூசி போடுவதில் பாலின இடைவெளி இருக்கக்கூடாது, எனவே, பெண்களுக்கு தடுப்பூசி போடும் விகிதத்தை வேக வேகமாக அதிகரிக்க வேண்டும்.
பல வீடுகளில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் ஆரோக்கியம் முன்னுரிமையாக கருதப்படுவதில்லை. அவர்கள் வெளியே சென்று வேலை செய்வது குறைவு என்பதால் இந்த பாகுபாடு உள்ளது. ஆனால் குடும்பத்தில் யார் பாதிக்கப்பட்டாலும் உடன் இருந்து கவனிப்பது பெண்கள்தான். இதன்மூலம் பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே இது குறித்து பொதுசுகாதார விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.” இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story