75-வது சுதந்திர தினம்: உலகம் முழுவதும் கொண்டாட வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு

75-வது சுதந்திர தினத்தையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள புகழ்பெற்ற கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்டவைகளில் இந்திய கொடி மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி,
75-வது சுதந்திர தினத்தையொட்டி பல நாடுகளின் கட்டிடங்கள், சுற்றுலா தலங்கள் மூவர்ணத்தில் ஒளிர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில், உலகெங்கிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தயாவின் 75-வது சுதந்திர தின விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
அமெரிக்க, இங்கிலாந்து, துபாய்,உள்ளிட்ட பல முக்கிய நாடுகளில் 75 மதிப்புமிக்க கட்டிடங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் ஆகஸ்ட் 15 மாலை முதல் ஆகஸ்ட் 16 காலை வரை இந்திய கொடியின் மூவர்ணம் வெளிச்சத்தில் பிரகாசிக்கின்றன.
Related Tags :
Next Story