ஒலிம்பிக் வீரர், வீரங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து


ஒலிம்பிக் வீரர், வீரங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
x
தினத்தந்தி 14 Aug 2021 12:45 PM GMT (Updated: 2021-08-14T18:15:30+05:30)

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர், வீரங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடம் பெற்றுள்ளது. இந்நிலையில்  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளித்தார்.  டெல்லி ராஷ்டிரபதி பவனில் வீரர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.  

தேநீர் விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். இந்த அணி ஒலிம்பிக் வரலாற்றில் நாட்டிற்காக அதிக பதக்கங்களை பெற்றுள்ளது. உங்கள் சாதனைகளால் முழு தேசமும் பெருமை கொள்கிறது என்றார். 

Next Story