கொரோனாவுக்கெதிரான போர் இன்னும் ஓயவில்லை - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

கொரோனாவுக்கெதிரான போர் இன்னும் ஓயவில்லை, 2-ம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:-
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டு ஆவதால் இந்த ஆண்டு சுதந்திர தினம் முக்கியத்துவம் பெறுகிறது.
இப்போது நாம் நமது சுதந்திர தினத்தின் 75 ஆண்டு பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது, நாம் பயணித்த கணிசமான தூரத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள காரணங்கள் உள்ளன.
தவறான திசையில் விரைவான முன்னேற்றங்களை விட சரியான திசையில் மெதுவான மற்றும் நிலையான படிகள் விரும்பத்தக்கது என காந்திஜி நமக்குக் கற்பித்துள்ளார்.
மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் அயராத உழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்தி வருகிறோம். கொரோன தடுப்பூசி செலுத்திக்கொள்ள நாட்டு மக்கள் முன்வர வேண்டும்.
கொரோனாவுக்கெதிரான போர் இன்னும் ஓயவில்லை, 2-ம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.
மத்திய அரசு அறிவித்துள்ள பல திட்டங்களில் ககன்யான் திட்டம் முக்கியமானது. எளிதாக தொழில் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story