சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு:சப்-இன்ஸ்பெக்டர் மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு:சப்-இன்ஸ்பெக்டர் மனு தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Aug 2021 12:06 PM IST (Updated: 15 Aug 2021 12:06 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி,

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுவிக்க கோரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆட்கொணர்வு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில், கோர்ட்டு உத்தரவை ரிட் மனு மூலம் ரத்து செய்ய முடியுமா? மாற்றுத் தீர்வுக்கு வேறு முடிவு எடுக்க வேண்டுமே தவிர, ரிட் மனு தாக்கல் செய்வது பொருத்தமாகாது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ரகு கணேஷின் ஆட்கொணர்வு மனுவை மனுவை தள்ளுபடி செய்கிறோம். மேலும் இந்த தள்ளுபடி உத்தரவு, இழப்பீடு கோரினால் அதைப் பாதிக்காது என்று தெரிவித்தனர்.

மேலும், மதுரையில் நடைபெறும் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய மனுவையும், ஜாமீன் மேல்முறையீட்டு மனுவையும் விரைந்து விசாரிக்கும் வகையில் உரிய அமர்வுக்கு பட்டியலிட பதிவாளர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டனர்.

Next Story