தேசிய போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை

சுதந்திர தினத்தையொட்டி தேசிய போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா இன்று மிகவும் சிறப்பாக, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து அந்தந்த மாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராம்நாத் கோவிந்த் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன், பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story