காஷ்மீரில் பா.ஜ.க. தொகுதி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை


காஷ்மீரில் பா.ஜ.க. தொகுதி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை
x
தினத்தந்தி 18 Aug 2021 2:11 AM IST (Updated: 18 Aug 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் பா.ஜ.க. தொகுதி தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.


ஸ்ரீநகர்,

காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தின் ஹொம்சாலி பக் தொகுதியின் தலைவராக இருந்தவர் ஜாவீத் அகமது தார்.  இந்நிலையில், பயங்கரவாத தாக்குதலில் அவர் நேற்று கொல்லப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.  இந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தண்டனையில் இருந்து தப்பி செல்ல முடியாது.  அகமதுவின் ஆன்மாவுக்கு இறைவன் சாந்தி அளிக்கட்டும்.  அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்து உள்ளது.


Next Story