குட்கா மென்ற மணமகனுக்கு...! மணமகள் பளார்...! வைரலாகும் வீடியோ


குட்கா மென்ற மணமகனுக்கு...!  மணமகள் பளார்...! வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 28 Aug 2021 10:39 AM GMT (Updated: 2021-08-28T16:09:02+05:30)

மணமேடையில் குட்கா மென்றுகொண்டு இருந்த மணமகனுக்கு மணமகள் பளார் என ஓங்கி அறைந்தார். அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

புதுடெல்லி

டெல்லியில் திருமண சடங்கின் போது வாயில் குட்காவை வைத்து மென்றுக்கொண்டிருந்த மணமகனை, மணப்பெண் ஓங்கி அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமேடையில் கோபமாக அமர்ந்திருந்த மணப்பெண், திருமண சடங்கின் போது வாயில் குட்கா வைத்திருந்ததால் மணமகனை ஓங்கி அடித்தார். முன்னதாக திருமணச் சடங்கு செய்த புரோகிதருக்கும் ஒரு அடி விழுந்த நிலையில் மணப்பெண் வாயில் குட்கா வைத்திருந்ததை கண்டித்த வீடியோ வெளியாகியுள்ளது.


Next Story