தமிழகத்தின் திருவண்ணாமலை நாக நதியை குறிப்பிட்டு பிரதமர் உரை


தமிழகத்தின் திருவண்ணாமலை நாக நதியை குறிப்பிட்டு பிரதமர் உரை
x
தினத்தந்தி 26 Sept 2021 11:54 AM IST (Updated: 26 Sept 2021 11:54 AM IST)
t-max-icont-min-icon

நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது:-

திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. திருவண்ணாமலை மக்களுக்கு பாராட்டுகள். நதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும் என்றார். 
1 More update

Next Story