டெல்லி: மதவழிபாட்டுத்தலங்கள் திறப்பு


டெல்லி: மதவழிபாட்டுத்தலங்கள்  திறப்பு
x
தினத்தந்தி 1 Oct 2021 4:49 AM GMT (Updated: 1 Oct 2021 4:49 AM GMT)

இன்று முதல் மத வழிபாட்டுத்தலங்களை திறக்க டெல்லி அரசு அனுமதித்துள்ளது.


புதுடெல்லி, 

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையால்  பொதுமுடக்கம் விடுக்கப்பட்டதை  தொடர்ந்து, ஏப்ரல் 19 -ஆம் தேதி முதல் தேசிய தலைநகரில் உள்ள  மதவழிபாட்டுத்தலங்கள்  ஐந்து மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டன. வைரஸ் தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. 

பண்டிகை காலங்கள் நெறுங்குவதை கருத்தில் கொண்டு மத வழிபாட்டுத்தலங்களையும் திறக்க டெல்லி  அரசு அனுமதித்துள்ளது. 

புதிய வழிகாட்டுநெறிமுறைகளின்படி, பக்தர்கள் மத வழிபாட்டுத் தலங்களுக்குள் நுழைய அனுமதி அளித்தாலும், அங்கு பெரிய அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் திருவிழாக்களின் போது  பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது என்று கூறியுள்ளது.

 பண்டிகை கொண்டாட்டங்கள் பொது இடங்களில் அனுமதிக்கப்படாது. மக்கள் தங்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும் என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் அக்டோபர் 15 நள்ளிரவு வரை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Next Story