ஒரு தலைக்காதல் : கல்லூரி வளாகத்தில் மாணவி கழுத்து அறுத்து கொலை; காதலன் வெறிச்செயல்

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
பாலா:
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கோம் தலயோழபரம்பை சேர்ந்தவர் நிதினா மோல் ( வயது 22) செயின்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வந்தார். இன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார்.
அப்போது வள்ளிச்சீராவைச் சேர்ந்த அபிஷேக் என்பவரும் தேர்வு எழுத வந்து உள்ளார்.அபிஷேக் நிதினாவுடன் படித்து வருகிறார்.
அபிஷேக் தேர்வு எழுவதை பாதியிலேயே நிறுத்தி வெளியே விட்டு சென்றார். கல்லூரி மண்டபத்தில் காத்திருந்த அவர், நிதினா தேர்வு எழுதிவிட்டு வந்தவுடன் அவருடன் சண்டையிட்டுள்ளார். பின்னர் திடீர் என அபிஷேக் பேப்பர்கட்டரை கொண்டு நிதினா கழுத்தை அறுத்து விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் நிதினா அதே இடத்தில் சாய்ந்தார். உடனடியாக மற்ற மாணவ மாணவிகள் நிதினாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்து விட்டனர்.
நிதினா கழுத்தை அறுத்த அபிஷேக் அதே இடத்தில் போலீசார் வரும் வரை இருந்து உள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர். காதல் விவகாரத்தில் கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story