இந்தியாவில் 14 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி


இந்தியாவில் 14 லட்சம் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 1 Oct 2021 9:25 PM GMT (Updated: 1 Oct 2021 9:25 PM GMT)

இந்தியாவில் 14 லட்சம் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவுக்கு எதிராக முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்படி மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் 2-ந்தேதி அனுமதித்தது. மேலும், கர்ப்பிணி பெண்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியது. இங்கு கர்ப்பிணி பெண்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் இப்போதுதான் விழிப்புணர்வு காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. 

அந்த வகையில் கடந்த 20-ந்தேதி வரையில் நாடெங்கும் இதுவரை 14 லட்சம் கர்ப்பிணி பெண்கள் கொரோனாவுக்கு எதிராக முதல் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். ஆனாலும் இது குறைவுதான் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். 

இதுபற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆலோசகரான பேராசிரியர் சுனீலா கார்க் கூறுகையில், “இந்தியாவில் ஆண்டுதோறும் 2.6 கோடி பெண்கள் கர்ப்பம் தரிக்கிறார்கள். தற்போதைய வேகம் போதாது. இந்த வேகத்தில் இவ்வளவு பேருக்கு தடுப்பூசி போட முடியாது. அரசு கவனமாக நகர்ந்தாலும்கூட, இவர்களுக்கு போடுவதில் ஒரு வேகம் வேண்டும். இருப்பினும் ஒரு தொடக்கம் ஏற்பட்டு விட்டது” என தெரிவித்தார்.

Next Story