குஜராத்: காந்திநகர் மாநகராட்சி தேர்தல் - பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்!


குஜராத்: காந்திநகர் மாநகராட்சி தேர்தல் - பிரதமர் மோடியின் தாயார் வாக்களித்தார்!
x
தினத்தந்தி 3 Oct 2021 5:50 AM GMT (Updated: 3 Oct 2021 5:50 AM GMT)

காந்திநகர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் காந்திநகர் மாநகராட்சியின் 11 வார்டுகளில் 44 கவுன்சிலர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி, நகரின் ராய்சன் கிராமத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று மாநகராட்சி தேர்தலுக்கு வாக்களித்தார்.

Next Story