உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடி: பிரதமர் மோடி பாராட்டு


உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடி: பிரதமர் மோடி பாராட்டு
x
தினத்தந்தி 3 Oct 2021 2:27 PM GMT (Updated: 3 Oct 2021 3:03 PM GMT)

காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 152-வது பிறந்தநாள் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, இந்திய ராணுவத்தின் பொறியாளர்களால் கதர் துணியால் நெய்யப்பட்ட மிகப்பெரிய தேசியக் கொடி, லடாக்கின் லே பகுதியில் நேற்று பறக்கவிடப்பட்டது. 225 மீட்டர் நீளமும், 150 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கொடி தான், உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி ஆகும். இந்தக் கொடியின் மொத்த எடை 1000 கிலோ.

இந்தநிலையில், காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் உலகிலேயே மிகப் பெரிய காதி தேசியக் கொடிக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது  டுவிட்டரில்,

 "காதி மீது விரிவான ஆர்வம் கொண்டிருந்த மதிப்புக்குரிய பாபுவுக்கு ஒப்பற்ற புகழஞ்சலியாக இது உள்ளது.

இந்த விழாக்காலம் காதி மற்றும் கைவினைப் பொருட்களை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும், தற்சார்பு இந்தியாவை கட்டமைக்கும் தீர்மானத்தை வலுப்படுத்துவதாகவும் அமைய வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Next Story