ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி


ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 3 Oct 2021 4:10 PM GMT (Updated: 3 Oct 2021 4:10 PM GMT)

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை நாளை வரை காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

மும்பை,

மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த  உல்லாச விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். 

சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் இன்று கைது செய்தது. இதையடுத்து கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை நாளை வரை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கோர்ட்டு அனுமதியளித்து உத்தரவிட்டது.

Next Story