மாநிலங்களிடம் 8.43 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு


மாநிலங்களிடம் 8.43 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: மத்திய அரசு
x
தினத்தந்தி 13 Oct 2021 3:19 PM IST (Updated: 13 Oct 2021 3:19 PM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களின் கையிருப்பில் 8.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களின் கையிருப்பில் 8.43 கோடி கொரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது;-

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் இதுவரை 97,79,37,495 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 8,43,76,070 தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரை 96.43 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன.

1 More update

Next Story