டெல்லியில் 723 பேருக்கு டெங்கு பாதிப்பு; முதன்முறையாக ஒருவர் பலி


டெல்லியில் 723 பேருக்கு டெங்கு பாதிப்பு; முதன்முறையாக ஒருவர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2021 9:14 AM GMT (Updated: 18 Oct 2021 9:35 AM GMT)

டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு முதன்முறையாக இன்று ஒருவர் பலியாகி உள்ளார். மொத்தம் 723 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள சூழலில் பருவமழையை முன்னிட்டு டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.  இதுவரை மொத்தம் 723 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இவற்றில் இந்த அக்டோபரில் 382 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இந்த நிலையில், டெல்லியில் டெங்கு பாதிப்புக்கு முதன்முறையாக இன்று ஒருவர் பலியாகி உள்ளார்.  இதனால், சுகாதார பணிகளை தீவிரப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


Next Story