மராட்டியம்: ஓடும் ரெயிலில் இறங்கிய கர்பிணியை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்
மராட்டியத்தில் ஓடும் ரெயிலில் இறங்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.
மராட்டியம்,
மராட்டியத்திலுள்ள கல்யாண் ரெயில் நிலையத்திலிருந்து ஒரு ரெயிலானது புறப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரம் ரெயிலை விட்டு கர்ப்பிணிப் பெண் ஒருவர் திடீரென்று கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தடுமாறினார்.
இதனை கண்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் கர்ப்பிணிப் பெண் சிக்கிவிடாத வகையில் இழுத்து காப்பாற்றினார். விரைவாக செயல்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை வீரரின் மூலம் அந்த கர்ப்பிணிப் பெண் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உயிர்தப்பினார்.
துரிதமாக செயல்பட்டு கர்ப்பிணியை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது.
ரெயில்வேயானது, ஓடும் ரெயிலில் ஏறவோ இறங்கவோ கூடாது என பலமுறை பயணிகளுக்கு எடுத்துரைத்து வருகிறது. ஆனால் பயணிகள் அதனை கேட்காமல் அலட்சியமாக செயல்படுவதே விபத்திற்கு காரணமாக அமைகிறது.
Related Tags :
Next Story