9 மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்ட ஒரு டோஸ் தடுப்பூசி!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 21 Oct 2021 7:02 PM GMT (Updated: 21 Oct 2021 7:02 PM GMT)

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

புதுடெல்லி, 

நாட்டில் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்ட நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள்தொகையில் 75 சதவீதத்துக்கு மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

31 சதவீதத்துக்கு மேற்பட்டோர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளன. அந்தமான், சண்டிகார், கோவா, இமாசலபிரதேசம், காஷ்மீர், லட்சத்தீவு, சிக்கிம், உத்தரகாண்ட், தாத்ரா நகர் ஹவேலி ஆகியவைதான் அந்த மாநிலங்கள் ஆகும். 

அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட முதல் 5 மாநிலங்கள் பட்டியலில் உத்தரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்காளம், குஜராத், மத்தியபிரதேசம் ஆகியவை இடம் பிடித்துள்ளன.

Next Story