100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: டுவிட்டரில் படத்தை மாற்றிய பிரதமர் மோடி


100 கோடி தடுப்பூசி செலுத்தி சாதனை: டுவிட்டரில் படத்தை மாற்றிய பிரதமர் மோடி
x
தினத்தந்தி 22 Oct 2021 7:48 AM GMT (Updated: 22 Oct 2021 8:08 AM GMT)

டுவிட்டரில் டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

புதுடெல்லி,

பொதுமக்களுக்கு 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து உள்ளன. இந்த வரலாற்று சாதனையை எட்டுவதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுகள்  என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 100 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள புதிய மைல்கல்லை அடைந்ததை குறிக்கும் விதமாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், 

தனது டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். இந்த சுயவிவரப் படமானது, கோவிட் தடுப்பூசி குப்பியுடன் 'வாழ்த்துகள் இந்தியா' எனக் குறிப்பிடும் வகையில் உள்ளது.

Next Story