நெற்பயிரை விற்க முடியாததால் சொந்த வயலுக்கே விவசாயி தீ வைக்கும் வீடியோ; வருண் காந்தி வெளியிட்டார்
விவசாயி ஒருவர் தான் விளைவித்த நெல்லை விற்க முடியாத விரக்தியில், அதை வயலோடு சேர்த்து தீ வைத்து எரித்தார்.வீடியோ பதிவை பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் விளைவித்த நெல்லை விற்க முடியாத விரக்தியில், அதை வயலோடு சேர்த்து தீ வைத்து எரித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ பதிவை பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.
அதில் அவர், ‘உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி, தனது நெற்பயிரை விற்பதற்காக கடந்த 15 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களாக ஏறி இறங்கினார். ஆனால் விற்க முடியாததால் விரக்தியடைந்த அவர் சொந்த வயலையே தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இந்த அமைப்பு, விவசாயிகளை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? வேளாண் கொள்கையை மறுபரிசீலனை செய்வதே இந்த தருணத்தின் தேவை ஆகும்’ என்று குறிப்பிட்டு உள்ளார். ஒரு விவசாயி தன் சொந்த பயிர்களுக்கு தீ வைப்பதை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை எனக்கூறியுள்ள வருண் காந்தி, நமக்கு உணவளிப்பவர்களை நம்மால் பாதுகாக்க முடியாவிட்டால் அது நாட்டில் உள்ள அனைவரின் தோல்வியாகும் என்றும் வருத்தம் தெரிவித்து உள்ளார்.
उत्तर प्रदेश के किसान श्री समोध सिंह पिछले 15 दिनों से अपनी धान की फसल को बेचने के लिए मंडियों में मारे-मारे फिर रहे थे, जब धान बिका नहीं तो निराश होकर इसमें स्वयं आग लगा दी।
— Varun Gandhi (@varungandhi80) October 23, 2021
इस व्यवस्था ने किसानों को कहाँ लाकर खड़ा कर दिया है? कृषि नीति पर पुनर्चिंतन आज की सबसे बड़ी ज़रूरत है। pic.twitter.com/z3EjYw9rIz
Related Tags :
Next Story