போதைப்பொருள் வழக்கு: 3-வது கட்ட விசாரணைக்கு அனன்யா பாண்டே ஆஜராகவில்லை


போதைப்பொருள் வழக்கு: 3-வது கட்ட விசாரணைக்கு அனன்யா பாண்டே ஆஜராகவில்லை
x
தினத்தந்தி 25 Oct 2021 10:06 AM GMT (Updated: 25 Oct 2021 10:06 AM GMT)

ஆர்யன் கான், இளம் இந்தி நடிகை அனன்யா பாண்டே போதைப்பொருள் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தது தெரியவந்தது.

மும்பை,

மும்பையில் இருந்து கோவாவுக்கு சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்(வயது23) கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் ஆர்யன் கான், இளம் இந்தி நடிகை அனன்யா பாண்டே போதைப்பொருள் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் சாட்டிங் செய்தது தெரியவந்தது. 

இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை அனன்யா பாண்டேவின் வீட்டிற்கு சென்ற போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின், லேப்-டாப் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்தனர். அதன்படி கடந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை என இருமுறை அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இந்தநிலையில் இன்று  மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர்.  ஆனால், இன்று அனன்யா பாண்டே விசாரணைக்கு ஆஜராகவில்லை. போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மனுக்கு பதிலளிக்க கூடுதல் அவகாசம் கோரியுள்ளார். 


Next Story