தலைவா தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்- தெண்டுல்கர்


தலைவா தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்-   தெண்டுல்கர்
x
தினத்தந்தி 26 Oct 2021 10:05 AM GMT (Updated: 26 Oct 2021 10:05 AM GMT)

தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய ரஜினிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

திரையுலகின் மிக உயரிய விருதாக கருதப்படுவது தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது திரையுலகில் நீண்ட காலம் பணியாற்றும் நபர்களுக்கு கௌரவம் செய்யும் வகையில் மத்திய அரசின் சார்பில் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. 

இந்த விருதானது நேற்று தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்களால், நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. இந்த உயரிய விருதினை ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். அதில்

"ஒவ்வொரு முறையும் தங்கள் திரைப்படம் வெளியாகும் போது அதிர்வலைகளை உருவாக்கக்கூடிய நடிகர்கள் மிகக் குறைவு. தலைவர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறையும் அதைச் செய்கிறார். தனது படைப்புகளால் பார்வையாளர்களை கவருகிறார்.தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்துகள்." என்று அந்த பதிவில் சச்சின் தெரிவித்துள்ளார்.


Next Story