நாடு முழுவதும் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 103.48 கோடி


நாடு முழுவதும் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 103.48 கோடி
x
தினத்தந்தி 26 Oct 2021 7:55 PM GMT (Updated: 26 Oct 2021 7:55 PM GMT)

நாட்டில் இதுவரை செலுத்திய கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 103.48 கோடியை கடந்துள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.


புதுடெல்லி,


நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை 7 மணி நிலவரப்படி இதுவரை 1,03,48,36,594 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதன்படி, 18 - 44 வயதுடையவர்களுக்கு முதல் தவணை 41,10,37,440 மற்றும் இரண்டாம் தவணை 13,11,13,078 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.  45 - 59 வயதுஉடையவர்களுக்கு முதல் தவணை 17,29,26,403 மற்றும் இரண்டாம் தவணை 9,27,40,536 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

60 வயதுக்கு மேல் முதல் தவணை 10,86,06,993 மற்றும் இரண்டாம் தவணை 6,47,03,420 டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.


Next Story