இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி


இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - 5 பேர் பலி
x
தினத்தந்தி 28 Oct 2021 10:27 AM GMT (Updated: 28 Oct 2021 10:27 AM GMT)

தேசிய நெடுஞ்சாலையில் இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம் ஹர்வா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுச்சாலையில் இன்று காலை மூன்று பேர் ஒரே பைக்கில் பயணம் செய்தனர். சிஜோ மோர் என்ற பகுதியில் பைக் வந்த போது சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு பைக்கிலும் வந்த மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் காயமடைந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story