ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - மத்திய மந்திரி தகவல்


ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி - மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 21 Nov 2021 3:48 AM GMT (Updated: 21 Nov 2021 3:48 AM GMT)

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய மந்திரிஅஷ்வினி குமார் சவுபே தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

சாதாரண அரிசியுடன் துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் சேர்த்து செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது. இந்த அரிசி சத்தானது, ஆரோக்கியமானது. இந்த அரிசியை ரேஷன் கடை மூலம் வினியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

டெல்லியை அடுத்த குர்கானில் நேற்று இந்திய உணவு கழகத்தின் தர கட்டுப்பாட்டு ஆய்வகத்தை மத்திய மந்திரி அஷ்வினி குமார் சவுபே திறந்து வைத்து பேசுகையில் இதைத் தெரிவித்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “வரும் ஆண்டுகளில் நாங்கள் ரேஷன் கடைகள் மூலமாகவும், பொதுச்சந்தைகள் மூலமாகவும் செறிவூட்டப்பட்ட அரிசியை கிடைக்கச்செய்ய முயற்சிக்கிறோம். இதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. உணவு பாதுகாப்பில் இருந்து ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கி நகர்கிறோம். இதை 2024-ம் ஆண்டுக்குள் செய்து முடிக்க பிரதமர் இலக்கு நிர்ணயித்துள்ளார்” என தெரிவித்தார்.

Next Story