கேரளாவில் மேலும் 4,350- பேருக்கு கொரோனா


கேரளாவில் மேலும்  4,350- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Nov 2021 2:08 PM GMT (Updated: 28 Nov 2021 2:08 PM GMT)

கேரளாவில் 4,350- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்  19- பேர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,838- ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து 5,691 - பேர் இன்று குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 46 ஆயிரத்து 219- ஆக உயர்ந்துள்ளது.  கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 47,001- ஆக உள்ளது. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story