கனமழை எதிரொலி; புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை


கனமழை எதிரொலி; புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
x
தினத்தந்தி 28 Nov 2021 4:59 PM GMT (Updated: 2021-11-28T22:29:49+05:30)

கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.


புதுச்சேரி,

வங்க கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை திங்கள்கிழமை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள் தாமதமாக நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) உருவாகிறது.

இதனையடுத்து தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மிக கனமழை வாய்ப்புள்ளதாகவும், அதன்படி, தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்த நிலையில், புதுச்சேரி கல்வி மந்திரி நமச்சிவாயம் இன்று கூறும்போது, தொடர்மழையை முன்னிட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை முன்னிட்டு புதுச்சேரியில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நாளை மற்றும் நாளை மறுநாள்) விடுமுறை அளிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளார்.


Next Story