உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து


உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து
x
தினத்தந்தி 28 Nov 2021 7:29 PM GMT (Updated: 28 Nov 2021 7:29 PM GMT)

வினாத்தாள் கசிந்ததால் உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத தயாராகி இருந்தனர்.

இந்த நிலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. இது ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சிறப்பு படையினர் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. இதன் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 23 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வினாத்தாளின் நகல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவை அனைத்தும் நேற்றைய தேர்வுக்கான வினாத்தாளின் நகல்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்காக வந்திருந்தவர்கள் மாநில அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் மூலம் இலவசமாக சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story