ஜனாதிபதி வருகையின்போது பணியில் இருந்த அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு


ஜனாதிபதி வருகையின்போது பணியில் இருந்த  அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 28 Nov 2021 8:53 PM GMT (Updated: 28 Nov 2021 8:53 PM GMT)

உத்தரகாண்டில் ஜனாதிபதி வருகையின்போது பணியில் ஈடுபட்டு இருந்த 7 அரசு அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

டேராடூன்,

உத்தரகாண்டிற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகை தந்தபோது, பாதுகாப்பு, பரிசோதனை உள்ளிட்ட பணிகளில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர்.  இந்த நிலையில், பாவ்ரி கார்வால் பகுதியை சேர்ந்த 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அரசு அதிகாரிகள் 7 பேருக்கு நடந்த பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்.


Next Story