குஜராத்தில் டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு


குஜராத்தில் டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 3:47 AM IST (Updated: 1 Dec 2021 3:47 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் 8 பெரிய நகரங்களில் டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.


வதோதரா,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதேபோன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு ஊரடங்கு உத்தரவும் அமலானது.

இந்த நிலையில், குஜராத் அரசு நேற்றிரவு (செவ்வாய் கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது.  இதன்படி, 8 பெரிய நகரங்களில் டிசம்பர் 10ந்தேதி வரை இரவு ஊரடங்கு (அதிகாலை 1 மணி முதல் 5 மணிவரை) நீட்டிக்கப்படுகிறது என அறிவித்து உள்ளது.


Next Story