டெல்லியில் மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழப்பு


டெல்லியில் மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 6:05 AM IST (Updated: 1 Dec 2021 6:05 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்கள் உயிரிழந்து உள்ளனர்.



புதுடெல்லி,


டெல்லியின் சத்தார்பூர் பகுதியில் வசித்து வந்தவர்கள் கோவிந்த் (வயது 25) மற்றும் தேவிந்த் (வயது 22).  இந்நிலையில், அவர்களுடைய வீட்டில் உயர் மின்னழுத்த மின்சாரம் தாக்கியதில் 2 சகோதரர்களும் உயிரிழந்து உள்ளனர்.

அவர்களை காப்பாற்ற சென்ற உறவினருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து விட்டனர்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story