தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா? - நிபுணர் குழு ஆராய்வதாக மந்திரி தகவல் + "||" + Most of the Current Covid-19 Vaccines Are Disease-modifying in Nature: MoS Bharati Pravin Pawar

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா? - நிபுணர் குழு ஆராய்வதாக மந்திரி தகவல்

கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா? - நிபுணர் குழு ஆராய்வதாக மந்திரி தகவல்
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தேவையா என்பது குறித்து நிபுணர் குழு ஆராய்வதாக மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

புதிய வகை வைரசான ஒமிக்ரான் பல நாடுகளில் பரவி வருகிற நிலையில், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் அவர், “கிடைக்கக்கூடிய அறிவியல் ஆதாரங்களின்படி, தற்போதைய கொரோனா தடுப்பூசிகளில் பெரும்பாலானவை நோயை மாற்றும் தன்மை கொண்டவை, இதில் தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது கணிசமாக குறைக்கப்படுகிறது. இருப்பினும், தடுப்பூசி போடப்பட்ட நபர்களில் ஒரு பகுதியினர் இன்னும் லேசான அல்லது அறிகுறியற்ற நோய்த்தொற்றுகளைக் கொண்டிருக்கலாம். எனவே, முககவசங்களை கண்டிப்பாகப் பயன்படுத்துதல், சமூக விலகலைப் பின்பற்றுதல் மற்றும் கைகளைக் கழுவுதல் உட்பட எல்லா நேரங்களிலும் வைரசுக்கு எதிரான பொருத்தமான நடத்தையை பின்பற்றுவது முக்கியம். சுகாதார அமைச்சகமும், ஐ.சி.எம்.ஆரும் இணைந்து இந்தியாவின் கொரோனா தடுப்பூசி டிராக்கரை உருவாக்கியுள்ளன.

கொரோனா தடுப்பூசியின் டோஸ் அட்டவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தேவை மற்றும் அதை நியாயப்படுத்துவது தொடர்பான அறிவியல் ஆதாரங்களை நிபுணர் குழு (கொரோனா தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில் நுட்ப குழு மற்றும் தேசிய நிபுணர் குழு) ஆராய்ந்து வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 600 இடங்களில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்!
தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
2. மூன்றாவது அலையில் இறந்தவர்களில் 60 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள்: ஆய்வுத்தகவல்
கொரோனா மூன்றாவது அலையில் 60 சதவீத இறப்புகள், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என்ற ஒரு ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.
3. தமிழகத்தில் சிறப்பு முகாம்: ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
4. டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தி சாதனை..!
டெல்லியில் அனைவருக்கும் முதல் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் தெரிவித்தார்.
5. கொரோனா தடுப்பூசி பணி தொடங்கி ஓராண்டு நிறைவு 157 கோடி ‘டோஸ்’ செலுத்தி சாதனை
கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதைத்தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 157 கோடி டோஸ் செலுத்தி சாதனை படைத்துள்ளதை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு இருக்கிறார்.