தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 4,700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Coronavirus Report in Kerala on 2nd December

கேரளாவில் இன்று 4,700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கேரளாவில் இன்று 4,700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 4 ஆயிரத்து 128 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 லட்சத்து 66 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 44 ஆயிரத்து 376  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 40 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
தமிழ்நாட்டில் நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடும்போது இன்று தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
2. மத்தியபிரதேசத்தில் மேலும் சுமார் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்தியபிரதேசத்தில் மாநிலத்தில் மேலும் 9 ஆயிரம் 966 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் மளமளவென குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 28.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35.47 கோடியாக அதிகரித்துள்ளது.
5. இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.