ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் திருட்டு - 350 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து திருடனை பிடித்த போலீசார்...!
350 சிசிவிடி கேமராக்களை ஆய்வு செய்து ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் மும்பையின் நிர்மல் நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் ஒரு பெண் நடத்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர் அந்த பெண் வைத்திருந்த செல்போனை பறித்துச்சென்றனர்.
தனது செல்போனை திருடர்கள் பறித்து சென்றது குறித்து நிர்மல் நகர் போலீசில் அப்பெண் புகார் அளித்துள்ளார். தனது செல்போனின் மதிப்பு 6 ஆயிரம் ரூபாய் எனவும், அதை திருடர்கள் பறித்து சென்றுவிட்டனர் எனவும் அப்பெண் புகார் அளித்துள்ளார்.
அப்பெண் அளித்த புகாரை தொடர்ந்து வழிப்பறி திருட்டு நடைபெற்ற பகுதி மற்றும் அதனை சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதேபோல், திருடர்கள் பயன்படுத்திய பைக் குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தினர். மொத்தம் 350 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 40 பைக்குகளை ஆய்வு செய்த போலீசார் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் விநாயக் ஷைண்டி என்பவனும், அவருக்கு துணையாக வேறு ஒரு நபரும் இந்த செல்போன் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து, டும்பிவிலி நகரில் பதுங்கி இருந்த விநாயக் ஷைண்டி (24) மற்றும் அவருக்கு திருட்டில் உதவிய கல்லூரி மாணவன் சந்தன் முரன்ஹர் (19) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட திருடர்கள் இருவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பெண்ணிடம் இருந்து திருடப்பட்ட 6000 ரூபாய் மதிப்புள்ள செல்போனும் மீட்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story