தமிழகத்தில் இதுவரை ரூ.1,034 கோடிக்கு நெல் கொள்முதல் - மத்திய அரசு தகவல்


தமிழகத்தில் இதுவரை ரூ.1,034 கோடிக்கு நெல் கொள்முதல் - மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2021 2:29 AM IST (Updated: 3 Dec 2021 2:29 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் இதுவரை ரூ.1,034 கோடிக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2021-2022-ம் ஆண்டுக்கான காரீப் பருவ நெல் கொள்முதல் பற்றிய விவரங்களை மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை 290.08 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.57 ஆயிரத்து 32 கோடியே 3 லட்சம் குறைந்தபட்ச ஆதரவு விலை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் 18 லட்சத்து 17 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர். 

தமிழகத்தில் 5,27,561 டன் நெல் கொள்முதல் நடைபெற்றதாகவும், இதன்மூலம் 71,311 விவசாயிகள் ரூ.1034.02 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் நெல் கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story