தேசிய செய்திகள்

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...! + "||" + Former TN Governor Rosaiah Passed away

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...!

தமிழ்நாடு முன்னாள் கவர்னர் ரோசய்யா காலமானார்...!
தமிழ்நாடு முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
ஐதராபாத்,

2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டின் கவர்னராக செயல்பட்டவர் ரோசய்யா (88). ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் 1933 ஆம் ஆண்டு பிறந்த ரோசய்யா காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் 2009-2010 வரை ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்-மந்திரியாக செய்லபட்டுள்ளார். மேலும், 2014-ம் ஆண்டில் கர்நாடக பொறுப்பு கவர்னராகவும் செயல்பட்டுள்ளார். 

தமிழ்நாட்டின் கவர்னர் பதவியில் இருந்து 2016-ல் ஒய்வு பெற்றதை அரசியல் களத்தில் இருந்து விலகி ஆந்திராவில் உள்ள தனது குடும்பத்தினருடன் ரோசய்யா வாழ்ந்து வந்தார். அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். ரோசய்யாவின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.