போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் - ராகேஷ் திகாய்த்


போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் - ராகேஷ் திகாய்த்
x
தினத்தந்தி 4 Dec 2021 10:24 AM IST (Updated: 4 Dec 2021 10:24 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு வேண்டும் என்றும் விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் தெரிவித்துள்ளார்.

டெல்லி,

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் டெல்லி-அரியானா எல்லையில் ஒராண்டாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, வேளாண் சட்டங்களை ரத்து செய்ய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ம் தேதி ஒப்புதல் அளித்தார். 

வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளபோது டெல்லி-அரியானா எல்லையில் நடத்தி வரும் தங்கள் போராட்டத்தை விவசாயிகள் கைவிட மறுத்து வருகின்றனர். 

வேளாண் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட வேறு சில கோரிக்கைகளை கையில் எடுத்துள்ள விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

போராட்ட களத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பாக அரியானா மாநில முதல்-மந்திரியுடன் விவாய சங்க தலைவர்கள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

இது தொடர்பாக விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாய்த் இன்று கூறுகையில், விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று அறிவித்த போதும் அரியானா முதல்-மந்திரி மற்றும் விவசாயிகள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பஞ்சாப் அரசு வழங்கியதை போல போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மாநில வாரியாக இழப்பீடு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்’ என்றார். 

Next Story