கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,557- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,557- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 4 Dec 2021 1:48 PM GMT (Updated: 4 Dec 2021 1:48 PM GMT)

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41,439- ஆக உயர்ந்துள்ளது.

திருவனந்தபுரம்,

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமான கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,557- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 58,817 - மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 7.74 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5,108- பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 43,771- ஆக உள்ளது. இதில் 7.6 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41,439- ஆக  உயர்ந்துள்ளது.  மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 51 லட்சத்து 61 ஆயிரத்து 471- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50,75,605- ஆக  அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக அதிகபட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 814- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 606- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் 566- பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Next Story