இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு


இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2021 7:57 PM IST (Updated: 4 Dec 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் 2 பேருக்கும், குஜராத் மற்றும் மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மராட்டியத்திற்கு வந்த 33-வயது நபருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கல்யாண் - டோம்பிவிலி பகுதியை சேர்ந்த 33-வயது நபர் தென் ஆப்பிரிக்க தலைநகர் கேப்டவுனில் இருந்து துபாய் மற்றும் டெல்லி வழியாக மும்பை வந்துள்ளார். 

இவர் இன்னும் ஒரு டோஸ் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. அவருடன் நேரடி தொடர்பில் இருந்த 12 பேர் மற்றும் அடுத்த நிலை தொடர்பில் இருந்த 23 பேரும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. கூடுதலாக ஒமைக்ரான் பாதித்த நபர் வந்த டெல்லி - மும்பை விமானத்தில் பயணித்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. 

ஏற்கனவே, கர்நாடக மாநிலத்தில் இருவர் மற்றும் குஜராத்தை சேர்ந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு  இருந்தது. தற்போது மராட்டிய நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.


Next Story