திரிபுராவில் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வீரர்


திரிபுராவில் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வீரர்
x
தினத்தந்தி 4 Dec 2021 10:18 PM IST (Updated: 4 Dec 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் சக வீரர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வீரர் சரண் அடைந்து உள்ளார்.

அகர்தலா,


திரிபுராவின் செபாஹிஜலா மாவட்டத்தில் கொனாபன் பகுதியில் 5வது பட்டாலியனில் வீரர்கள் தங்கி இருந்தனர்.  இந்நிலையில், சக வீரர்களை நோக்கி மற்றொரு வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இதன்பின் அந்த வீரர் சரண் அடைந்து உள்ளார்.  முதல்-மந்திரி பிப்லப் தேவ் உயிரிழந்துள்ள வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்ச இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.


Next Story