ஊழலில் திளைக்கும் மராட்டிய அரசு எந்திரம்: தேவேந்திர பட்னாவிஸ்


ஊழலில் திளைக்கும் மராட்டிய அரசு எந்திரம்: தேவேந்திர பட்னாவிஸ்
x
தினத்தந்தி 5 Dec 2021 2:08 AM IST (Updated: 5 Dec 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

மாநில அரசு செய்யும் ஊழலால் மராட்டியத்தில் அரசு எந்திரம் மோசமாகிவிட்டதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து உள்ளார்.

அரசு எந்திரம் பாதிப்பு

மும்பையில் நடந்த பா.ஜனதா கட்சி அலுவலக திறப்பு விழாவில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-

ஒரு காலத்தில் மராட்டிய அரசு எந்திரம் நாட்டில் சிறந்ததாக இருந்தது. ஆனால் தற்போது அதன் நிலை மோசமாக உள்ளது. ஊழலில் திளைக்கிறது. அரசு ஊழல் மற்றும் பணம் பறித்தலில் மும்மரமாக உள்ளது. இதன் காரணமாக அரசு எந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மோடியின் தலைமை

பிரதமர் மோடியின் தலைமை காரணமாக தான் நாடு இவ்வளவு பெரிய கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தியை செய்து உள்ளது. சமீபத்தில் மராட்டியத்தில் 10 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொது மக்களுக்கு போடப்பட்டதாக மாநில அரசு கூறியது. அந்த தடுப்பூசி மருந்து சொர்க்கத்தில் இருந்த விழுந்துவிடவில்லை. மோடியின் முயற்சியால் தான் இதை மாநில அரசால் சாதிக்க முடிந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story