நாகலாந்து விவகாரம்: உள்துறை அமைச்சகம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது? ராகுல் காந்தி கேள்வி
நாகலாந்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பாதுகாப்பு படையினர் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதுடெல்லி,
நாகலாந்து மாநிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் தவறான புரிதலில் அப்பாவி பொதுமக்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலில் பொதுக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதுகாப்பு படை தரப்பில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து இருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நாகலாந்து சம்பவம் குறித்து வேதனை தெரிவித்து ராகுல் காந்தி தனதுடுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: நாகலாந்து சம்பவம் இதயத்தை உலுக்குகிறது. இந்திய அரசாங்கம் உண்மையான பதிலை அளிக்க வேண்டும். எங்கள் சொந்த நிலத்தில் பொதுமக்களோ அல்லது பாதுகாப்புப் படையினரோ பாதுகாப்பாக இல்லாதபோது உள்துறை அமைச்சகம் என்னதான் செய்கிறது? ” எனக்கேள்வி எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story