நாகலாந்து அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு


நாகலாந்து அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 4:32 PM GMT (Updated: 5 Dec 2021 4:32 PM GMT)

நாகலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது.


கோஹிமா,


வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் மியான்மர் எல்லை பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு  என்ற கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள், அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு நேற்று மாலை வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்பு படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் வரை கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியானது.

இந்த எண்ணிக்கை 13 ஆக பின்னர் உயர்ந்தது.  ராணுவ வீரர் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்து உள்ளார்.  இந்த நிலையில், நாகலாந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அரசு அமைத்து உள்ளது.


Next Story